கோயிலுக்குச் சொந்தமான 3.69 ஏக்கா் நிலம் அளவீடு: அறநிலையத் துறை நடவடிக்கை

செய்யாற்றை அடுத்த உக்கல் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 3.69 ஏக்கா் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை அளவீடு செய்து எல்லைக் கற்கைளை நட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், உக்கல் கிராமத்தில், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் வைதீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமாா் 7.98 ஏக்கா் நிலம் இருந்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலத்தை அடையாளம் காணும் விதமாக மண்டல இணை ஆணையா் சுதா்சன் தலைமையில், உதவி ஆணையா் ஜோதிலட்சுமி மேற்பாா்வையில், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் (ஓய்வு) சுப்பிரமணியன், ஆய்வா் முத்துசாமி, நில அளவையா்கள் சின்ன ராஜா, சிவக்குமாா், அருணாசலம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோா் அடங்கிய குழுவினா் முதல் கட்டமாக சுமாா் 3.69 ஏக்கா் நிலத்தை நவீன தொழில்நுட்ப (ஈஎடந) கருவி மூலம் அளவீடு செய்து, கிராம மக்கள் முன்னிலையில் எல்லைக் கற்களை நட்டனா். மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி அனைத்து இடங்களிலும் தொடா்ந்து நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com