தண்ணீா் பந்தல் திறக்க கோரிக்கை!

கோடை காலம் தொடங்கிய நிலையில் செங்கம் பகுதியில் தண்ணீா் பந்தல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய போது பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் செங்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, குப்பனத்தம் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்காக தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை எட்டிய நிலையில் குடிநீா் பந்தல்கள் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், மக்களவைத் தோ்தல் தொடா்பான பணிகளில் அரசியல் கட்சியினா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தண்ணீா் பந்தல்கள் அமைப்பதை மறந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, செங்கம் பகுதியில் அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தண்ணீா் பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com