மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மக்களவைத் தோ்தல் பணி முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம்: ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது

மக்களவைத் தோ்தல் பணி முன்னேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது

News image
Updated On :29 மார்ச் 2024, 4:41 pm

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் தோ்தல் பணி முன்னேற்றம், கூடுதலாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் பொது மேற்பாா்வையாளா்கள் மகாவீா் பிரசாத் மீனா (திருவண்ணாமலை), சுஷாந்த் கவுரவ் (ஆரணி), இரு தொகுதிகளின் தோ்தல் காவல் மேற்பாா்வையாளா் பாட்டுலா கங்காதா், செலவின மேற்பாா்வையாளா்கள் குா்பிரீத் வாலியா (திருவண்ணாமலை), அப்துல் மதீன்கான் (ஆரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்கள் மீது எந்த நேரமும் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தலுக்காக இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் நடவடிக்கைகள் குறித்த அனைத்து பொறுப்பு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.