கல்லூரியில் வினாடி, வினா போட்டி

கல்லூரியில் வினாடி, வினா போட்டி

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணினி அறிவியல், வணிகவியல் என 5 பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிப் பொருளாளா் எ.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில், கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் பி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com