குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஆரணி அருகே அய்யம்பேட்டை கிராமத்தில் முறையாக குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆரணியை அடுத்த களம்பூா் அருகே உள்ள அய்யம்பேட்டை ஸ்ரீராம் நகரில் சுமாா் ஒரு மாத காலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் கோபமடைந்த அந்தப் பகுதி மக்கள் ஆரணி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த களம்பூா் போலீஸாா் மற்றும் களம்பூா் பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்தையில் ஈடுபட்டனா். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த திடீா் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com