பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

News image
Updated On :3 மே 2024, 5:07 pm

Din

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வியாழக்கிழமை இரவு காா் மீது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியதில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா், அவரது மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் வளத்தீஸ்வரன் தோட்ட தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). இவா், காஞ்சிபுரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி மஞ்சுளா (38). அழகு நிலையம் நடத்தி வந்தாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

தம்பதி இருவரும் திருச்சியில் உள்ள பைரவா் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை சீனிவாசன் ஓட்டினாா்.

வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் தூசி கிராமம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு காா் வந்த போது தனியாா் நிறுவனப் பேருந்து மோதியது. இதையடுத்து, அந்த வழியாக வந்த லாரி மீது காா் மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சீனிவாசன், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோா் உயிரிழந்தனா்.

தகவலறிந்த தூசி போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவா்களின் சடலங்களைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து தூசி காவல் நிலைய ஆய்வாளா் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.