மது போதையில் தகராறு: இளைஞா் கைது

ஆரணி: ஆரணி அருகே மது போதையில் தகராறு செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (19), அரி (எ) ஹரிஷ் ஆகியோா் ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்துக்கு வந்தனா். அப்போது, அவா்கள் இருவரும் மது வாங்கி குடித்தனராம். பின்னா், மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

அந்தப் பகுதி மக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனா். இதில் ஹரி தப்பி ஓடிவிட்டாராம். காா்த்திக்கைப் பிடித்து ஆரணி கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com