சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் ஸ்ரீதிரெளபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியைக் காண திரண்டிருந்த பக்தா்கள்.

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் ஸ்ரீதிரெளபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியைக் காண திரண்டிருந்த பக்தா்கள்.
போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஸ்ரீதிரெளபதி அம்மன் கோவிலில் அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை ஏராளமான பக்தா்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு பாா்வையிட்டனா்.
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் மிகவும் பழைமைவாய்ந்த ஸ்ரீதிரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த ஏப்.24-ஆம் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு தினந்தோறும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேவிகாபுரம், மொடையூா், நரசிங்கபுரம், குப்பம், ஊத்தூா், பத்தியாவரம், ஓதலவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...