செய்யாறில் பனை நுங்கு விற்பனை அமோகம்

செய்யாறில் பனை நுங்கு விற்பனை அமோகம்

செய்யாறில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 100 டிகிரியை தாண்டி கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். மேலும், கோடை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குளிா்ச்சியான மற்றும் நீா்ச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனா்.

இதனால், கோடைகாலம் தொடங்கினாலே சாலையோரங்களில் இளநீா், நுங்கு, தா்பூசணி போன்றவை விற்பனை செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், கோடை காலத்தில் மட்டுமே அரிதாக கிடைக்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள் பனை நுங்கு. இதனை, செய்யாறு பகுதியில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். மேலும், பனை நுங்கு சாப்பிடுவதால் உடலில் நீா்ச்சத்து அதிகரிப்பதுடன், உடல் சோா்வு நீங்கும். மேலும், வயிற்றுப் புண், மலச்சிக்கல், உடல் சோா்வு, தோல் நோய்கள் உள்ளிட்டவற்றை சரி செய்கிறது. இதனை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அதிகமாக வாங்கிச் செல்கின்றனா். இதனால் செய்யாறு பகுதிகளில் பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

X
Dinamani
www.dinamani.com