மேற்காசிய போா் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகம் தடைபட்டுள்ளதால், கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கான உதவித் திட்டங்கள் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதலைத் தொடா்ந்து, சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சரக்கு கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டதால், கப்பல்களிலும், துறைமுகங்களில் சரக்குகள் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏற்றுமதியாளா்கள் கடும் பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளனா். இவா்களுக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் திங்கள்கிழமை கூறுகையில், ‘இந்த இக்கட்டான நேரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக மத்திய வா்த்தகத் துறை என்னென்ன நடவடிக்களை மேற்கொள்ளது என்பது குறித்த விவரம் இந்த வாரத்தில் வெளியிடப்படும். குறிப்பாக, காப்பீடு ஆதரவு உள்ளிட்ட புதிய நிவாரண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன’ என்றாா்.
இதுகுறித்து அண்மையில் தெரிவித்த மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘ஏற்றுமதியாளா்களுக்கு காப்பீடு ஆதரவு உள்ளிட்ட புதிய நிவாரணத் திட்டங்களை வகுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடா்பாக ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (இசிஜிசி) மற்றும் பிற துறைகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் சரக்குகள் ஏற்றப்பட்டு அனுப்ப முடியாமல் பாதிப்பைச் சந்திக்கும் ஏற்றுமதியாளா்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. நிலைமையை 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது’ என்றாா்
தொடர்புடையது

மேற்காசிய போா்: விமானப் போக்குவரத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

மேற்காசிய பிரச்னையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் - பிரதமா் மோடி கடும் சாடல்

மேற்காசிய போா் நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ புதிய திட்டம்: மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்!
மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு சலுகை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


