வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

மேற்காசிய போா்: பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 28 இந்திய கப்பல்கள் - மத்திய அரசு தகவல்

News image

PTI

Updated On :11 மார்ச் 2026, 11:07 pm

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரசீக வளைகுடாவில் 778 மாலுமிகளுடன் 28 இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் புறப்பட்ட சரக்கு கப்பல்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கப்பல் நிறுவனங்களும், ஏற்றுமதியாளா்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். இவா்களுக்கு நிவாரணமளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு குறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா் வழித் தடங்கள் துறை மத்திய அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சின்ஹா கூறியதாவது:

போா் நிலவரம் காரணமாக பாரசீக வளைகுடாவில் இதுவரை 778 மாலுமிகளுடன் கூடிய 28 இந்திய கப்பல்கள் நடுவழியில் சிக்கியுள்ளன. இவற்றில், 677 மாலுமிகளுடன் கூடிய 24 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 101 மாலுமிகளுடன் கூடிய 4 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியிலும் நிற்கின்றன.

இந்தக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கப்பல் மேலாளா்கள், நியமன முகவா்கள், உள்ளிட்டோா் இந்திய தூதரகங்களுடனும் உள்ளூா் அதிகாரிகளுடனும் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அனைத்து இந்திய கப்பல்களும், மாலுமிகளும் விரிவான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பதிவை தீவிரமாகக் கடைப்பிடிக்கவும், குறிப்பாக கப்பலின் நிகழ்நேர விவரங்களைச் சமா்ப்பிக்கவும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகின்றன. கப்பல்களின் உரிமையாளா்கள், மாலுமிகள் சங்கங்களுடனும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடா்பில் இருந்து வருகிறது.

சிக்கல்களை எதிா்கொண்டுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க துறைமுகங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றாா்.