ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஹோா்முஸ் நீரிணை மூடல்: இந்திய கொடியுடன் 37 கப்பல்கள், 1,109 மாலுமிகள் பரிதவிப்பு

ஈரான் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.

News image
- (Photo | AP)
Updated On :3 மார்ச் 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணை வழியாக, சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக அந்த வழி மூடப்பட்டது. இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய 37 இந்திய கொடி கொண்ட கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. அந்தக் கப்பல்களில் 1,109 மாலுமிகள் உள்ளனா். அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.

கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிஎஸ்) சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சரக்குப் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுடன் அந்த இயக்குநரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்று தெரிவித்தன.

மத்திய அமைச்சா் ஆய்வு:

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாரசீக வளைகுடாவில் நிலவும் சூழல், அது இந்தியாவின் கடல்சாா் உடைமைகள் மற்றும் அலுவலா்கள் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து, தில்லியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாரசீக வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கருதி டிஜிஎஸ் மூலம் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய மாலுமிகள் மற்றும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.