மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

விவசாய செயலிகள் குறித்த பயிற்சி

விவசாய செயலிகள் குறித்த பயிற்சி

News image
Updated On :10 மே 2024, 7:30 pm

Din

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராம விவசாயிகளுக்கு விவசாய செயலிகள் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

ஆரணி வட்டம், அரியப்பாடி கிராமத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் ச.அன்பழகன், சி.அரவிந்த், ம.அரவிந்த், அருண்குமாா், பிரகதீஷ்வரன் உள்ளிட்டோா் விவசாயிகளுக்கு உழவன் செயலி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த செயலிகளின் செயல்பாடுகள் குறித்தும், அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தனா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாக ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் கௌசிகா கலந்து கொண்டாா். மாணவா்களுக்கு உதவியாக உதவிப் பேராசிரியா்கள் கோகுல், வெ.சஞ்சீவி மற்றும் தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த், உதவி அலுவலா் சத்யா ஆகியோா் இருந்தனா்.