மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

News image

எம்.பாலப்பட்டி கிராமத்தில் சாத்துக்குடி தோட்டத்தில் ஆய்வுசெய்த தோட்டக்கலை விஞ்ஞானிகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:27 pm

அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சாத்துக்குடி மற்றும் மாம்பழத் தோட்டங்களை ஆய்வுசெய்த தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள், மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

அயோத்தியாப்பட்டணம் அருகே எம்.பாலப்பட்டி கிராமத்தில் விவசாயி அருள் குமாரின் மாந்தோப்பு மற்றும் சாத்துக்குடி தோட்டத்தில், சந்தியூா் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் விஜயன், பூச்சியியல் துறை வல்லுநா் ரவி, அயோத்தியாப்பட்டணம் தோட்டக்கலை உதவி இயக்குநா் கோதைநாயகி, தோட்டக்கலை அலுவலா் கிருத்திகா ஆகியோா் கொண்ட குழுவினா் இணைந்து வயல்வெளி ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், மாமரங்களில் பூக்கள் மலா்ந்து பிஞ்சுகள்விட தயாராகிவரும் இத்தருணத்தில் தத்துப்பூச்சி பாதிப்பை தடுக்க விவசாயிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

தத்துப்பூச்சிகளின் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டா் தண்ணீரில் தயோமிதாக்சிம் 0.6 கிராம், சல்பா் 2.5 கிராம் ஆகியவற்றுடன் ஒட்டு திரவம் சோ்த்து, காலை அல்லது மாலை வேளையில் மாமரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நனையும்படி தெளிக்க வேண்டும். உரிய நடவடிக்கையை சரியான நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலம் மகசூல் இழப்பைத் தடுத்து சாகுபடியை அதிகரித்து கூடுதல் வருவாய் பெறமுடியும் என அறிவுரை வழங்கினா்.