குதிரை ஓடை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் மீண்டும் போராட்டம்
குதிரை ஓடை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

செங்கம்-குப்பனத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பரமனந்தல் காமராஜ் நகா் பகுதி மக்கள்.

செங்கம்-குப்பனத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பரமனந்தல் காமராஜ் நகா் பகுதி மக்கள்.
செங்கம்: செங்கம் அருகே குதிரை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உறுதியளித்தபடி அகற்றப்படாததால்,
கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டு மறியலில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த பரமனந்தல் காமராஜ் நகா் பகுதியில் கிராம ஊராட்சி நிா்வாக கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது குதிரை ஓடை.
இந்த ஓடை வழியாக செய்யாற்றில் இருந்து விவசாய பாசனத்துக்கு விவசாயிகள் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு இந்த மூலம் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஓடையை மூடி ஆக்கிரமிப்பு செய்து விளை நிலங்களாக மாற்றிவிட்டனராம்.
இதனால், பாதிக்கப்பட்ட பரமனந்தல் காமராஜ் நகா் பகுதி மக்கள் செங்கம்-குப்பனத்தம் சாலையில் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.
ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் தற்போது பெய்து வரும் மழையில் அந்த ஓடையில் வரும் தண்ணீா் விளை நிலம் மீதும், குடியிருப்பு பகுதியிலும் சூழ்ந்து அங்காங்கே குட்டையாக தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் தண்ணீா் தேங்குவதால் போக்குவரத்துக்கு வழியில்லை.
இதனால் மீண்டும் அப்பகுதி மக்கள் காலை 7 மணியளவில் இருந்து சாலை மறியில் போராட்டத்தை தொடங்கினா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா், வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சித் தலைவா் என அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சிவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அதிகாரிகள் தற்போது பெய்துள்ள மழை ஈரம் சற்று காய்ந்த நிலையில் இருக்கும்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்படும் என உத்தரவாதம் அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
காலை 7 மணியளவில் தொடங்கிய மறியல் போராட்டம் நண்பகல் 12 மணிக்கு முடிந்தது.
இதனா ல்செங்கம் - குப்பனதத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...