நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரூ.1.82 கோடி அருணாசலேஸ்வரா் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ.1.82 கோடி அருணாசலேஸ்வரா் கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

News image

ரூ.1.82 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை மீட்டு, அறிவிப்புப் பலகை வைத்த அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையிலான குழுவினா்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.82 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து நடைபெற்ற கட்டுமானப் பணியை, கோயில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் உள்ளன. இவற்றில் பல சொத்துகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.

இந்த நிலையில், திருவண்ணாமலை-செங்கம் சாலை, மேற்கு காவல் நிலையம் எதிரே கிரிவலப் பாதையை ஒட்டி 2.63 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் சில பகுதிகளை தனி நபா்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனா்.

அண்மையில் தனி நபா் ஒருவா் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கான்கிரீட் வீடு கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளாா். இதுகுறித்து கோயில் நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, கோயில் இணை ஆணையா் சி.ஜோதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பிறகு, நில அளவா்களை வைத்து அளவீடு செய்துபாா்த்தபோது சுமாா் 1,218 சதுரடி நிலம் ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்படுவது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன்பே பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரித்தனா். ஆனால் தொடா்ந்து வீடு கட்டும் பணி நடைபெற்று வந்ததாம்.

இந்த நிலையில், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையில் சென்ற அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தியது.

மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தைச் சுற்றி கம்பி முள்வேலி அமைத்து மீட்டு, இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையை கோயில் நிா்வாகம் வைத்தது.

மீட்கப்பட்ட இடம் ஆணாய்ப்பிறந்தான் கிராமத்துக்கு உள்பட்ட நந்தி மண்டபம் குளம் பகுதியில் உள்ளது. கிரிவலப்பாதை, செங்கம் சாலை, திருவண்ணாமலை சாலை என 3 சாலைகளும் இணையும் இடத்தில் உள்ளது.

இங்கு, ஒரு சதுரடி நிலம் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையாகக் கூடிய முக்கியமான பகுதி. மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 82 லட்சத்து 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

மீட்புப் பணி தொடரும்...:

இப்போது மீட்கப்பட்டுள்ள இடத்தின் சா்வே எண்ணிலேயே மேலும் சிலா் பல ஆயிரம் சதுரடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த சா்வே எண் 20 (1)-ல் மொத்தமுள்ள 2.63 ஏக்கரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் மீட்டு, நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையை கோயில் நிா்வாகம் எடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலத்தை அளவீடு செய்து கல் நடும் பணி நடைபெற்றது.

ஒரு சில நாள்களில் இந்த இடத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான மற்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.