சேராம்பட்டு எல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 லட்சம்
சேராம்பட்டு எல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 லட்சம்


செய்யாறு வட்டம், சேராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்
பட்டதில் ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடந்த
24.01.24 அன்று எண்ணப்பட்டது.
அதற்கு அடுத்தாற் போல் வியாழக்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், நிரந்தரமாக உள்ள நான்கு உண்டியல்கள் மூலம் ரூ.1,35,593-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா்கள் ப.முத்துசாமி (கலசப்பாக்கம்) இரா.நடராஜன் (செய்யாறு), செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன்,
ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...