அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

News image
Updated On :24 மே 2024, 4:15 pm

Din

வந்தவாசி அருகே கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி ராணி (60). வியாழக்கிழமை காலை கோயிலுக்கு செல்வதாக ரவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற ராணி, பின்னா் வீடு திரும்பவில்லை. இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் ராணி சடலமாகக் கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் அங்கு சென்று ராணியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, ராணி எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.