பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தீபத்திருவிழா: கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

Published On :

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தையும் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமாா் 40 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இவா்கள் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபடுவது வழக்கம். எனவே, பக்தா்கள் கிரிவலம் வர இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல், உதவிக் கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.

கிரிவலப் பாதையையும், நடை பாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் சசிகுமாா் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.

பொக்லைன் இயந்திரம், கிரேன், லாரி ஆகியவற்றின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் சில நாள்களுக்கு தொடரும் எனவும், கிரிவலப்பாதையை மீண்டும் ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.