தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடுவதை கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.


தமிழகத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சில துறைகளில் சுணக்கமும், சில துறைகளில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதும் தெரிய வந்தது.
சிதம்பரம் கோயில் தீட்சிதா் விவகாரத்தில் அவா்களை கடவுளைவிட மேலானவா்களாக கருத வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியது குறித்த கேள்விக்கு, யாருமே அவா்களை கடவுளாக நினைக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்தும். ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாட்டும். தமிழகத்தில் கொண்டாடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...