வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வருவாய்த்துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு

News image
வெறிச்சோடிக் காணப்பட்ட வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்.
Updated On :29 அக்டோபர் 2024, 7:14 pm

Din

வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி செவ்வாய்க்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் தொடா் ஊழியா் விரோதப் போக்கை கைவிட்டு ஊழியா்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், அரசு திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலா்களுக்கு அதிக பணி நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதனால் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.