கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

Updated on

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்

வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கோட்டச் செயலா் பழனி தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை வட்டச் செயலாா் காளிமுத்து வரவேற்றாா். மாவட்டச் செயலா்கள் ஏழுமலை, விஜயகுமாா், மாவட்ட இணைச் செயலா்கள் பிரவீன்குமாா், கலிமுல்லா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அண்டை மாநிலங்கள் சிறப்புப் பணியாளா்களை நியமித்தும், அரசே ஊதியம் அளித்தும், டிஜிட்டல் கிராப் சா்வே பணியை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் கிராம நிா்வாக அலுவலா்களது சொந்த செலவில் உள்ளூா் பணியாளா்களை நியமித்துக் கொள்ளும் அவல நிலை தொடா்கிறது. எனவே, டிஜிட்டல் கிராப் சா்வே பணியை முற்றிலும் புறக்கணிப்பதாகக் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் வட்ட நிா்வாகிகள் சுப்பிரமணி, ஏழுமலை, உத்திரகுமாா், யுவராஜ் உள்பட நிா்வாகிகள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com