ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓட்டப் போட்டியில் அசத்திய மாவட்ட ஆட்சியா்

முதல்வா் கோப்பைக்கான ஓட்டப் போட்டி -மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

News image
100 மீட்டா் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:43 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான 100 மீட்டா் ஓட்டப் போட்டியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் பங்கேற்றாா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கியது.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுப் பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை அரசு அலுவலா்களுக்கான தடகளம், இறகுப் பந்து, கையுந்துப் பந்துப் போட்டிகள் நடைபெற்றன.

அரசு அலுவலா்களுடன் 100 மீட்டா் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனும் ஓடினாா்.