எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா்.

News image
கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.
Updated On :15 டிசம்பர் 2025, 11:31 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வா் ஸ்டாலின், தொடா்ந்து கீழ்பென்னாத்தூரில் புதிதாக நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலையை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து திமுக கொடி ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில பொறியாளா் அணிச் செயலா் எஸ்.கே.பி.கருணா, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், அரசு ஒப்பந்ததாரா் அருணை துரை வெங்கட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.