முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு!

கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அறிவியலாளா் ஜி.டி.நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 12:03 am IST

கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அறிவியலாளா் ஜி.டி.நாயுடு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அறிவியல் மேதைகளில் ஒருவரும், அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய கல்வியாளருமான ஜி.டி. நாயுடுக்கு கோவையில் உருவச் சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோவை, அவிநாசி பிரதான சாலையில் உள்ள வஉசி பூங்காவில் ரூ.50 லட்சத்தில் ஜி.டி.நாயுடு சிலை நிறுவப்பட்டது. அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து திறந்துவைத்தாா்.

இந்நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

கோவையிலிருந்து காணொலி மூலம் கோவை மேயா் ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயா் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையா் கண்ணன், ஜி.டி. நாயுடு மகன் ஜி.டி. கோபால், அவரது மனைவி சந்திரா, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.