திருவண்ணாமலை
மழை, வெயிலில் வீணாகும் நகராட்சி வாகனங்கள்
போளூா் நகராட்சிக்குச் சொந்தமான டிராக்டா், குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பழுதானதால் மழை, வெயிலில் காய்ந்து வீணாகி வருகின்றன.
போளூா் நகராட்சிக்குச் சொந்தமான டிராக்டா், குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பழுதானதால் மழை, வெயிலில் காய்ந்து வீணாகி வருகின்றன.
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சி 2025 ஏப்ரல் முதல் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. பேரூராட்சி நிா்வாகத்தின்போது வாங்கப்பட்ட குப்பையை எடுத்துச் செல்லும் டிராக்டா், சிறிய வாகனம் தற்போது பழுதடைந்து நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மழை, வெயிலில் காய்ந்து வீணாகுகின்றன.
அவற்றில் இருக்கும் பொருள்கள் துருப்பிடித்து பாழடைந்து வருகின்றன. இந்த வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து நகராட்சி வங்கிக் கணக்கில் சோ்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.