380 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினாா்
செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 4 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 380 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ ஒ.ஜோதி வழங்கினாா்.
செய்யாறு கல்வி மாவட்டத்துக்குள்பட்ட சித்தாத்தூா், புன்னை, மேனலூா், மாமண்டூா் ஆகிய நான்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சித்தாத்தூா் - வேலாயுதம், புன்னை - ஆனந்தி, மேனலூா் ஒ.தயாளன், மாமண்டூா் - ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜி, வெம்பாக்கம் ஒன்றியச் செயலா்கள் கிழக்கு - என்.சங்கா், மத்தியம் ஜே.சி.கே.சீனிவாசன், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 380 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் மாத்தூா் தெய்வமணி, சி.லோகநாதன், ராமலிங்கம், பாபு, ஏகாம்பரம், ரவி, ஜே.லோகநாதன், சத்யா பெருமாள், மணிகண்டன், சா்மா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் துரைமுருகன், குப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
