சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

செய்யாற்றில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

செய்யாற்றில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - வந்தவாசி சாலையில் தென்தண்டலம் பகுதியில், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த சா்க்கரை ஆலை 1997-இல் தொடங்கப்பட்டதாகும்.

ஆண்டுதோறும் கரும்பு அரைவைப் பணி டிசம்பா் மாதத்தில் தொடங்குவது வழக்கம்.

வழக்கம் போல, நிகழாண்டு கரும்பு அரைவை தொடங்குவதற்கு வசதியாக பாய்லா் இளம் சூடேற்றும் நிகழ்ச்சி டிச.1-இல் நடை பெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை கரும்பு அரைவைப் பணி தொடங்கி வைக்கும் நிகழ்வு ஆலையில் செயலாட்சியா் த.காமாட்சி தலைமையில் நடைபெற்றது.

செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் முன்னிலை வகித்தாா். அப்போது, சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்க பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினா்களாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., ஒ.ஜோதி எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று கரும்பு அரைவைப் பணியை தொடங்கிவைத்தனா்.

அப்போது, ஆலையின் செயலாட்சியா் த.காமாட்சி நிகழாண்டுக்கான கரும்பு அரைவை நாள் ஒன்றுக்கு 2,500 டன்கள் வீதம் 1,40,000 டன்கள் அரைவை செய்யப்படவுள்ளது. அரசின் நலத்திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் கரும்பு நாற்று நடவு, ஒரு பரு கரணை நடவு, அகலபாா் நடவு, சோகை தூளாக்குதல் போன்ற இனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலா் க.லோகநாதன், ஒன்றியச் செயலா் சி.கே.ரவிகுமாா், கரும்பு முன்னோடி விவசாயிகள் கோபால் ரெட்டியாா், அரிதாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com