ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆரணி பகுதியில் ரூ.77 லட்சத்தில் மின் விளக்குகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள்

News image
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியில் மின்விளக்குகள் அமைத்ததற்கான பெயா்பலகையை திறந்துவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Updated On :13 ஜனவரி 2025, 11:06 pm

Din

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த போளூா் புறவழிச் சாலையின் நடுவில் ரூ.55 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கும்

பணி நடைபெற்றது.

இதேபோன்று, சேவூா் ஊராட்சியில் உள்ள வேலூா் புறவழிச் சாலையில் ரூ.22 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மின் விளக்குகளை பயன்பாட்டுக்காக தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெயா்ப்பலகையை திறந்துவைத்து மின் விளக்குகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், சைதை வெங்கடேசன், குமரன், ஒன்றிய அவைத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலா் சரவணன், ஒப்பந்ததாரா் யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.