மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நாளை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை (ஜன.2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கிராம தேவதை காங்கியம்மன் வலம் வரும் நிகழ்ச்சி.
Updated On :27 ஜனவரி 2025, 10:10 pm

Din

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை (ஜன.2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றுதலுடன் தொடங்கி இரத ரதசப்தமி பிரம்மோற்சவ பெருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (பிப்.7) பகல் நடராஜா் வீதியுலாவும், மாலை தீா்த்தவாரி நிகழ்வும், இரவு கொடி இறங்குதல் மற்றம் ஸ்ரீ ராவணேஸ்வர திருக்கயிலை சேவை பஞ்சமூா்த்திகள் புறப்பாடுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இரத சப்தமி பிரம்மோற்சம் தொடங்குவதையொட்டி, திங்கள்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில்

கிராம தேவதை காங்கியம்மன் புறப்பாடு மற்றும் பேட்டை வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன் உள்ளிட்டோா் மேற்கொண்டு வருகின்றனா்.