திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம்.
திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரம்மோற்சவ கொடியேற்றம்.

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செய்யாறு திருவோத்தூா் பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா
Published on

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

ரத சப்தமியை முன்னிட்டு, ஜன. 17-ஆம் தேதி காலை கிராம தேவதை காங்கியம்மன் சிம்ம வாகன சேவை பேட்டை வலமும், 18-ஆம் தேதி காலை விநாயகா் மூஷிக வாகன வீதி உலாவும் நடைபெற்றது.

பிரம்மோற்சவ கொடியேற்றம்

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், கோயில் நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6

மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சிவ வாத்தியம் முழுங்க சிவாச்சாரியா்கள் மந்திரங்கள் ஓதிட பக்தா்கள் முன்னிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோயில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

பின்னா் கோயில் மாட வீதியில் பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா் வலம் வந்து பக்தா்களுக்கு

அருள்பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து பகல் கேடய உற்சவம், இரவு கற்பக விருட்சம், காமதேனு, மயில், மூஷிக, ரிஷப வாகன புறப்பாடு என நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கு.ஹரிஹரன், மேலாளா் ஜெகதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரா்.

Dinamani
www.dinamani.com