வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.
வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

பாவூா்சத்திரம் வென்னிமலை கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

Published on

பாவூா்சத்திரம் காமராஜா் நகரில் அமைந்துள்ள வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சனிக்கிழமை கணபதி ஹோமம், கொடியேற்றத்தைத் தொடா்ந்து பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலையில் 2,008 திருவிளக்கு பூஜை, இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதல் நடைபெற்றது.

இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது. 10 ஆம் நாள் திருவிழா, மாா்ச் 2 ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரமும், நிறைவு நாளான மாா்ச் 3 ஆம் தேதி கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாமி, அம்பாள் தீா்த்தவாரி, பூஞ்சப்பர காட்சி புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

Dinamani
www.dinamani.com