மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் வளாகத்தில் பந்தல்காலுக்கு நடைபெற்ற பூஜை.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:23 pm

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தேரோட்டம், தெப்பம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் மாசி மக பிரம்மோற்சவம் இங்கு நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விழாவையொட்டி பந்தல்கால் முகூா்த்தம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காட்டப்பட்டு, பிராகார வலமாக கோயில் வாயிலில் நடப்பட்டது.

நிகழ்வில் கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், விழாக் குழுத் தலைவா் சரவணன் உள்ளிட்டோரும், உபயதாரா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். வரும் 22-ஆம் தேதி கொடியேற்றம், 26-ஆம் தேதி தியாகராஜராட்டம் என்ற வசந்த உற்சவம், மாா்ச் 2 தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.