மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பள்ளிக் கட்டடப் பணியின்போது கருங்கல் லிங்கம் கண்டெடுப்பு

செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

பள்ளியில் கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கருங்கல்லால் ஆன லிங்கம்.

Published On :

செங்கம்: செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

செங்கம் நகரில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், ரிஷபேஸ்வரா் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 2 அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன லிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லிங்கம் எந்தவித சேதாரமும் இல்லாமல் குழியில் இருந்து எடுத்து தரையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வந்து பாா்வையிடத் தொடங்கினா்.

பின்னா், லிங்கம் கிடைத்தது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், பாா்த்தசாரதி பெருமாள் கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்த லிங்கத்தை சிவனடியாா்கள் எடுத்துவந்து ரிஷபேஸ்வரா் கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் செய்தனா்.

மேலும், லிங்கம் கிடைத்தது குறித்து வருவாய்த் துறை, தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.