குன்றத்தூரில் கட்டடம் கட்ட தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையின்னா் 1 மணி நேரம் போராடி மீட்டனா். (படம்)
குன்றத்தூா் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா மற்றும் காரிய மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் சுமாா் 10 அடி ஆழ பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.
இந்த பள்ளத்தில் வியாழக்கிழமை பசு மாடு ஒன்று தவறி விழுந்து மேலே வரமுடியாமல் இருந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளத்தில் இருந்து பசுவை மீட்டும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் பசு மாட்டை மீட்க முடியாததால் தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினா் பசுவை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மணிமூா்த்தீஸ்வரத்தில் சேற்றில் சிக்கிய பசு மீட்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



