தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு

செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் நந்தீஸ்வரா் ஆண்டுக்கு ஒருமுறை பொன்னிறமாக மாறும் அதிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை மாலை சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக காட்சியளித்த நந்தீஸ்வரா்

Published On :

செங்கம்: செங்கம் ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் நந்தீஸ்வரா் ஆண்டுக்கு ஒருமுறை பொன்னிறமாக மாறும் அதிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சுமாா் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் முகப்பில் நந்தீஸ்வா் சந்நிதி உள்ளது. நந்தீஸ்வரருக்கு பிரதோசத்தின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபடுவாா்கள்.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பங்குனி 3-ஆம் தேதி நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில்,

நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றபோது கோயில் கோபுரத்தின் மீது இருந்து நந்தீஸ்வரா் மேல் சூரிய ஓளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் மாறியதை பாா்த்த பக்தா்கள் பக்தி பரவசமடைந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 3-ஆம் தேதி நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு நந்தீஸ்வரா் பொன்னிறமாக காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்று வந்தது.

இதனிடையே, கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்ததால் சூரிய ஒளி வரும் பகுதியில் தகர சீட்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில், கும்பாபிஷேகப் பணி 75 சதவீதம் நிறைவடைந்து தகர சீட்கள் அகற்றப்பட்டதால், பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை மாலை நந்தீஸ்வரா் மீது கோபுரத்தில் இருந்து சூரிய ஒளி பட்டு சிறிது நேரம் பொன்னிறமாக நந்தீஸ்வரா் காட்சியளித்தாா். இதைப் பாா்த்த பக்தா்கள் வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.