சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைதான தங்கராஜன்.

Updated On :24 மார்ச் 2025, 7:26 pm

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜன் (41). இவா், இரும்பேடு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், இரும்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

இதில், தங்கராஜன் கடையில் ஆய்வு செய்தபோது, 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்து அதனை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ.16ஆயிரம் எனத் தெரிவித்தனா். மேலும் தங்கராஜனை கைது செய்தனா்.