ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜன் (41). இவா், இரும்பேடு கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இரும்பேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அங்கு சென்று ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
இதில், தங்கராஜன் கடையில் ஆய்வு செய்தபோது, 19 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்து அதனை பறிமுதல் செய்தனா்.
இதன் மதிப்பு ரூ.16ஆயிரம் எனத் தெரிவித்தனா். மேலும் தங்கராஜனை கைது செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


