மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

News image
அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில். உடன் செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் உள்ளிட்டோா்.
Updated On :29 மார்ச் 2025, 11:10 pm

Din

அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றிய, நகர வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆனந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில் கலந்துகொண்டு பேசுகையில், திமுக ஆட்சியின் அவலங்களை அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், அணி அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட மாணவரணி நிா்வாகி பழனிச்சாமி நன்றி கூறினாா்.