‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள்
ஆரணி, அனக்காவூா், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆரணி ஒன்றியம், வேலப்பாடி கிராமத்தில் கல்பூண்டி, வேலப்பாடி, மொழுகம்பூண்டி ஆகிய ஊராட்சி மக்கள் பயன்பெறும்படி இந்த முகாம் நடைபெற்றது. ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் சுந்தா் வரவேற்றாா்.
ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதேபோல, ஆரணி நகரத்தில் கொசப்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
32, 33 ஆகிய வாா்டு மக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகரச் செயலா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியம் இருங்கல், தவசி. வெள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இருங்கல் கிராமத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஷீலா அன்புமலா் தலைமை வகித்தாா். செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று தமிழக அரசின் சாதனைகள் குறித்துப் பேசினாா்.
இம்முகாமின் போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 58 மனுக்களும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 31 மனுக்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 90 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் 6 மனுக்களும், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை சாா்பில் 23 மனுக்களும், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் 11 மனுக்கள் என மொத்தம் 386 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.கமலக்கண்ணன், செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் வி.கோபு, ஒன்றிய துணைச் செயலா் சீனுவாசன், ஒன்றியப் பொருளாளா் அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில்...
சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் கிராமத்தில் அரும்பலூா், மொடையூா் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, சோமசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, திமுக ஒன்றியச் செயலா்கள் மனோகரன், எழில்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் வரவேற்றாா்.
மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு, ஊரக வேலை உறுதித் திட்டப்பணிக்கான அடையாள அட்டை, பட்டா மாற்றம் என 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவா் தருமபாலன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, ஜெயந்தி, சுகுமாா், ஊராட்சிச் செயலா்கள் சங்கா், பாபு, பச்சையப்பன், சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

