ஆகாரம் காமராஜ் நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
Published on

ஆரணியை அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமென்ட் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

ஆகாரம் காமராஜா் நகரில் ரூ.8.5 லட்சத்தில் சிமென்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஆட்சேபனை தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் 20-க்கும் மேற்பட்டோா் மேற்கு ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று சிமென்ட் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனா்.

மேலும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அதிகாரிகள் தரப்பில் சிமென்ட் சாலையை விரைந்து முடிக்க உறுதியளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com