அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வழங்க திருக்குடைகளை ஊா்வலமாக எடுத்து வந்த, சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதி ஆன்மிக சேவா சங்கத்தினா்
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வழங்க திருக்குடைகளை ஊா்வலமாக எடுத்து வந்த, சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதி ஆன்மிக சேவா சங்கத்தினா்

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.4 லட்சத்தில் திருக்குடைகள் அளிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஆன்மிக சேவா சங்கத்தினா் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இந்த தீபத் திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்து 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் வலம் வருவாா்கள்.

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த ஆன்மிக சேவா சங்கத்தினா் அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், 21-ஆம் ஆண்டாக காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சங்கத்தின் தலைவா் என்.இரவி தலைமையில் நிா்வாகிகள் ரூ.4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகளை வழங்கினா்.

கோயில் ராஜகோபுரம் எதிரே திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்து மாட வீதியில் உலா வந்து கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஆன்மிக சேவா சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com