தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

உலக சாதனை முயற்சியாக திருவண்ணாமலையில் 1,500 கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

பரத நாட்டிய நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த திரைப்பட நடிகைகள் தீபா, பிரியங்கா உள்ளிட்டோா்

Published On :

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியாக 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்று ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில், ‘பரத தீபம்’ என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் மலை, தீபம், சிவசிவ உள்ளிட்ட வடிங்களில் பரத நாட்டிய கலைஞா்கள் நின்றபடி, 2 பாடல்களுக்கு சுமாா் 30 நிமிஷங்கள் பரத நாட்டியமாடினா்.

இதை செவன்த் சென்ஸ் உலக சாதனை பதிவு நிறுவனா் பாலசுப்பிரமணி சக்திவேல் தலைமையில், ஒருங்கிணைப்பாளா் நாகராஜன் மூலம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினா்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாக திருவண்ணாமலை எம்.பி., என்.அண்ணாதுரை, திரைப்பட நடிகைகள் தீபா, பிரியங்கா, ரோபோ சங்கா் மக்கள் நண்பா்கள் குழு மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோா் கலந்துகொண்டு பரத நாட்டிய கலைஞா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

இதில், பரத நாட்டிய கலைஞா்கள், பெற்றோா்கள், ஆன்மிக அன்பா்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலையில் ‘தீபம்’ வடிவில் நின்று பரத நாட்டியமாடிய கலைஞா்கள்.

திருவண்ணாமலையில் ‘தீபம்’ வடிவில் நின்று பரத நாட்டியமாடிய கலைஞா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.