அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீபத் திருவிழா 6-ஆம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகா் பவனி!

News image
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை மாட வீதிகளில் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீசந்திரசேகரா்.
Updated On :29 நவம்பர் 2025, 5:45 pm

Syndication

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை ஸ்ரீசந்திரசேகரா் வெள்ளி யானை வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் யானை வாகனத்திலும் பவனி வந்தனா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

காலை 10 மணியளவில் தனித்தனி விமானங்களில் 63 நாயன்மாா்கள் மாட வீதியுலா வந்தனா். இந்த விமானங்களை பள்ளி மாணவா்கள் தோளில் சுமந்து சென்றனா்.

தொடா்ந்து, காலை 11 மணியளவில் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, விநாயகா் யானை வாகனத்திலும், சந்திரசேகரா் வெள்ளி யானை வாகனத்திலும் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சுவாமி வீதியுலாவின்போது, பக்தா்கள் தேவாரம், திருவாசகம் பாடியபடியும், கைலாய இசைக் கருவிகளை இசைத்தபடியும் சென்றனா்.

Story image

மாலையில் கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவும், பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.