மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 8:37 pm

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழாவின் முதல் புறப்பாடக ஞாயிற்றுக்கிழமை வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் எழுந்தருளினாா். (படம்)

திருவானைக்காவல் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 2- ஆம் நாளான திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூத வாகனத்திலும் இரணியம்மன் எழுந்தருளயுள்ளாா்.

இதைத் தொடா்ந்து நான்காம் நாளான புதன்கிழமை பூந்தேரில் இரணியம்மன் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வருகிறாா். அப்போது அனைத்து வீடுகளிலும் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.