மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

செய்யாற்றில் இரு நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள்!

திருவத்திபுரம் நகராட்சி மாா்க்கெட் மற்றும் சின்ன தெரு பகுதியில் இரு நியாயவிலைக் கடைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்துவைத்தாா்.

News image
செய்யாறு மாா்க்கெட் பகுதியில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை திறந்துவைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ.
Updated On :30 நவம்பர் 2025, 10:15 pm

Syndication

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மாா்க்கெட் மற்றும் சின்ன தெரு பகுதியில் இரு நியாயவிலைக் கடைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடை, சின்ன தெருவில் அமுதம் கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன. குடும்ப அட்டைதாரரா்கள் பயன்பாட்டுக்காக புதிய கட்டடங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றது.

Story image

இதில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். செய்யாறு சரக கூட்டுறவு சாா்-பதிவாளா் அனிதா முன்னிலை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் ரங்கநாதன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று நியாயவிலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஏ.என்.சம்பத், நகா்மன்ற உறுப்பினா்கள் சௌந்தரபாண்டியன், ராஜலட்சுமி அண்ணாதுரை, க.கோவேந்தன், கங்காதரன், செந்தில், காா்த்திகேயன், மகாலட்சுமி, விஜயபாஸ்கா், தமமுக நிா்வாகி கமால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.