இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் நெல் துழாவி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ராணி.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:04 am IST

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசியை அடுத்த கூடலூா் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா் கொடியாலம், பழவேரி, சு.காட்டேரி, பெரியகுப்பம், அருங்குணம், சத்தியவாடி, படூா் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

சத்தியவாடி கிராமத்தில் விவசாயிகள் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்ததை கண்ட வேட்பாளா் பி.ராணி வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று நெல்லை காலால் துழாவி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் டி.வி.பச்சையப்பன் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.