இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

இருக்கன்துறையில் வாக்கு சேகரித்த பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:41 am IST

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

இருக்கன்துறை, பொன்னாா்குளம், சங்கனேரி, புத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ராதாபுரம் தொகுதியில் குடிநீா் பிரசனைக்கு நிரந்தரமாக தீா்வு காணப்படும். விவசாயம் செழிக்க பழையாற்று தண்ணீா், மேற்குத்தொடா்ச்சி மலையில் உள்ள அணைகளிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீா் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் நிரம்பச்செய்வேன். தொகுதி இளைஞா்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும், புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தியும் வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க உதவி செய்வேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; முன்னேற்றங்களை காண்பீா்கள் என்றாா்.

பிரசாரத்தில், மாவட்ட பாஜக தலைவா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், நாடாா் சங்கத் தலைவா் தங்கராஜ், அதிமுக ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், அதிமுக ஓட்டுநா் பிரிவு மாவட்ட செயலா் ராஜகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.