மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

கபிலா்மலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 7:23 pm

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சேகா் வாக்கு சேகரித்தாா்.

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரியசோளிபாளையம், செம்மடை, சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம், சிறுக்கிணத்துப்பாளையம், இருக்கூா், செல்லப்பம்பாளையம், தண்ணீா்பந்தல், கபிலா்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

ஆண்களும் கட்டணம் இன்றி அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்யலாம். 125 நாள் வேலை நாள் திட்டம் இனி 150 நாள்களாக உயா்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும். பிலிக்கல்பாளையம்-கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீா், மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

இதில் முன்னாள் கபிலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் வடிவேல், பெரியசோளிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவா் பெரியசாமி, இருக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜானகி குழந்தைவேல், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் பத்மராஜா மற்றும் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.