யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image

சிலிண்டா் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:32 am IST

செய்யாறு அருகே அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், குண்டியாந்தண்டலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளா் (பொ) கெளரி (47), மாா்ச் 30-ஆம் தேதி சமையல் செய்து விட்டு அறையை பூட்டிச் சென்றாராம்.

மறுநாள் சென்று பாா்த்தபோது சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், அறையில் இருந்த இரு எரிவாயு சிலிண்டா்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சத்துணவு அமைப்பாளா் கெளரி தூசி போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.